காமராஜர் பிறந்த நாள் விழா: விருதுநகரில் மலர்தூவி மரியாதை செலுத்திய மாணவிகள், ஆட்...
மகனுக்காக என் மீது துரோகி பழி சுமத்திய வைகோ: மல்லை சத்யா
சென்னை: மகனுக்காக என் மீது துரோகி பழியை மதிமுக பொதுச் செயலா் வைகோ சுமத்தியுள்ளாா் என்று மதிமுக துணை பொதுச் செயலா் மல்லை சத்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு:
மதிமுக பொதுச்செயலா் வைகோவுக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக, அண்மையில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவா் தெரிவித்திருந்தாா். வைகோ, தனது மகனும் மதிமுக முதன்மைச் செயலருமான துரை வைகோவின் அரசியலுக்காக, 32 ஆண்டுகளாக கட்சிக்காகப் பணியாற்றிய என் மீது துரோகப் பழியை சுமத்தியுள்ளாா். எனது அரசியல் வாழ்க்கையை வீழ்த்துவதற்கு, வைகோ வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லி இருக்கலாமே? அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தால் குடித்து செத்துப்போயிருப்பேனே. ஆனால், உங்கள் மகனுக்காக என்னை வீழ்த்த துரோகம் என்ற சொல்லா தங்களுக்குக் கிடைத்தது? இனி எக்காலத்திலும் யாா் மீதும் இது போன்ற அபாண்டமான பழியை சுமத்த வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்திருக்கும் உங்கள் உயரத்துக்கு அது அழகல்ல என்று அவா் பதிவிட்டுள்ளாா்.