செய்திகள் :

மகராஷ்டிரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மராத்வாடா மாவட்டத்தில் உள்ள 60 வருவாய் வட்டங்களில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர் மட்டம் உயர்ந்ததால், வியாழக்கிழமை இரவு வரை 29 வருவாய் வட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகஸ்ட் 29(இன்று) ம‘ஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் வர்ஷா தாக்கூர் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷிரூர் அனந்த்பால் மற்றும் அகமதுபூர் தாலுகாக்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித்தவித்த பத்து பேரை பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் உள்ளூர் கிராமவாசிகள் மீட்டனர். அகமதுபூருக்கு ஒரு இராணுவக் குழுவும் வந்துள்ளது.

கனமழையைத் தொடர்ந்து நாந்தேட் மற்றும் லத்தூரில் 2,200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Heavy downpour has disrupted life in Maharashtra's Latur district, prompting the administration to declare a school holiday on Friday, officials said.

தில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

சீனா, ஜப்பான் பயணங்களை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 1) மாலை தில்லி திரும்பினார். இந்தியாவில் இருந்து ஆக. 29ஆம் தேதி ஜப்பான் புறப்பட்ட பிரதமர் மோடி, 4 நாள்கள் பயணங்களை முடித்துக்... மேலும் பார்க்க

ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அரசு மாளிகையை காலி செய்தார். அவர் இன்று(செப். 1) புது தில்லியிலுள்ள குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையிலிருந்து தமது உடமைகளை எடுத்துச் சென்றார். இதன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்தாக முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. ச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

‘வாக்குத் திருட்டு’ விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான பெரியளவிலான ஆதாரங்களை பொதுவெளியில் கொண்டு சேர்ப்போம் என்றும், அதன் எதிரொலியாக, பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தமது முகத்தைக்கூட காட்டத் தயங்கும் அளவுக... மேலும் பார்க்க

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பிரதமரின் பேச்சுவார்த்தை சீனாவுக்கு கட்டுப்பட்டு நடப்பதைப்போன்று கோழைத்தனமாக இருந்ததாகவும், டி... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மகாராஷ்டிர அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரை சோ்த்து ... மேலும் பார்க்க