வயலூா் சாலையில் பேருந்து நிழற்குடைகள் இல்லை: பொதுமக்கள் அவதி
மகாராஷ்டிரா: ஓடும் பேருந்தில் பிரசவம்; ஜன்னல் வழியாக குழந்தையை வீசிய பெற்றோர்; என்ன நடந்தது?
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் இருந்து புனே நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் ரிதிகா என்ற பெண் பயணம் செய்தார். அவருடன் அவரது கணவர் அல்தாப் ஷேக் என்பவரும் பயணம் செய்தார்.
இதில் ரிதிகா கர்ப்பமாக இருந்தார். அவர்கள் சிலீப்பர் சீட்டில் பயணம் செய்தபோது நள்ளிரவில் திடீரென ரிதிகாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சிறிது நேரத்தில் அவருக்கு பேருந்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்கள் துணி ஒன்றில் சுற்றி பேருந்து ஜன்னல் வழியாக குழந்தையை வெளியில் தூக்கிப் போட்டுவிட்டனர்.
இதனைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் எதை வெளியில் போடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அல்தாப் தனது மனைவி வாந்தி எடுத்துவிட்டதால் அந்தத் துணியை வெளியில் போட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் ரிதிகாவின் படுக்கைக்கு அருகில் பயணம் செய்த மற்றொரு பயணி கொடுத்த புகாரின் பேரில் பேருந்தை நிறுத்தி எதை வெளியில் வீசினர் என்று பார்த்தபோது துணியில் குழந்தை ஒன்று இருந்தது.
வெளியில் வீசப்பட்டதில் குழந்தை இறந்திருந்தது. உடனே ஓட்டுநர் போலீஸ் கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் பேருந்தை விரட்டி வந்து ரிதிகாவையும், அவரது கணவரையும் பிடித்துச்சென்றனர். ரிதிகாவிடம் விசாரித்தபோது தனது கணவர்தான் குழந்தையை ஜன்னல் வழியாக வெளியில் போட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இருவரும் கணவன், மனைவி என்று சொன்னார்கள். ஆனால் அதற்கு அவர்களிடம் எந்த வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. இருவரும் புனேயில் வசிப்பதாகவும், குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதி குழந்தையை வெளியில் போட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். போலீஸார் குழந்தை பெற்ற பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.