சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் 4 மாவோயிஸ்ட்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் மகாராஷ்டிர-சத்தீஸ்கர் எல்லையில் சுற்றிவளைத்து பாதுகாப்புப்படையினர் வெள்ளிக்கிழமை காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் பகுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!
தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து 4 மாவோயிஸ்டுகளின் சடலங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டனர்.
முன்னதாக சத்தீஸ்கரின் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நக்ஸல் இயக்கத்தின் முதுகெலும்பாக கருதப்பட்ட உயா்நிலைத் தலைவா் நம்பலா கேசவ் ராவ் (எ) பசவராஜு உள்பட 27 நக்ஸல்கள்அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.