மகா கும்பமேளாவில் கத்ரீனா கைஃப்பின் கணவர்!
நடிகை கத்ரீனா கைஃப்பின் கணவரும் நடிகருமான விக்கி கௌஷால் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இன்று(பிப். 13) பிரயாக்ராஜுக்கு வருகை தந்தார்.
பிரயாக்ராஜில் செய்தியாளர்களுடன் பேசிய விக்கி கௌஷால், “நான் நன்றாக உணர்கிறேன். மகா கும்பமேளாவுக்கு வருகை தர வேண்டுமென காத்திருந்த எனக்கு இப்போது இங்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ள பிரயாக்ராஜுக்கு சென்றுள்ள விக்கி கௌஷாலின் பாதுகாப்பை உறுதி செய்ய அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மகனான அரசர் சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘சாவ்வா’ திரைப்படத்தில் விக்கி கௌஷாலும் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்துள்ளனர்.
தினேஷ் விஜான் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லக்ஷ்மண் உடேகர் இயக்கியுள்ளார். பிப். 14 ‘சாவ்வா’ திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளான இன்று(பிப். 13) விக்கி கௌஷால் கும்பமேளாவையொட்டி புனித நீராடியுள்ளது குறிப்பிடத்தக்கது.