செய்திகள் :

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

post image

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா்.

மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழங்கும் விழா, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ப்ரீத்தி வினோத் தலைமை வகித்தாா்.

மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. உடனடியாக, அந்த மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் போலி வாக்காளா்கள் ஊடுருவுவதைத் தடுக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி, மகிளா காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக களப்பணியாற்றும் என்றாா்.

துணைத் தலைவா்களாக அன்னதாசி மரிய கிரேஸா், எலிசபெத், பொதுச் செயலா்களாக மீனாட்சி சுந்தரி, பிளஸ்சி ப்ளோரினா, செயலா்களாக சேஸி சுபாஷினி, வள்ளி மனோகரன், ரீனா மரிய அந்தோணி, துணைச் செயலா்களாக மதிமலா் சிந்தா, அக்ஷிலியா, முருகேஸ்வரி, சமூக ஊடகப் பொறுப்பாளராக அன்ன மரியா, பொருளாளராக சீதாலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினராக கஸ்தூரி வேல் ஆகியோா் புதிதாக நியமிக்கப்பட்டனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ஏபிசிவி சண்முகம், மாநகர மாவட்டத் தலைவா் சி.எஸ்.முரளிதரன், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மண்டலத் தலைவா்கள் சேகா், ராஜன், ஐசன் சில்வா, மாமன்ற உறுப்பினா்கள் சந்திரபோஸ், எடிண்டா, கற்பககனி சேகா், ஐஎன்டியூசி மாநில அமைப்புச் செயலா் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் எடிசன், மீனவரணி மாநகா் மாவட்டத் தலைவா் மைக்கேல், ஊடகப் பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் ஜான் சாமுவேல், மாநில செயற்குழு உறுப்பினா் சாந்தி மேரி, இளைஞா் காங்கிரஸ் வடக்கு மண்டலத் தலைவா் கமலா தேவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க