செய்திகள் :

மக்களவையில் அமளிக்கு இடையே 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்

post image

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே செவ்வாய்க்கிழமை 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்கி வருகின்றன. இத்திருத்தம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மற்றொருபுறம், அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிா்க்கட்சிகளின் தொடா் முழக்கத்துக்கு மத்தியில், துறைமுகங்கள் தொடா்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும் மசோதாவை (இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதா-2025), மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் தடங்கள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் தாக்கல் செய்தாா்.

இம்மசோதா, துறைமுக வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பை ஊக்குவித்து, தொழில் புரிவதை எளிதாக்க வகை செய்கிறது. முக்கிய துறைமுகங்கள் தவிர பிற துறைமுகங்களின் திறன்மிக்க மேம்பாடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வளா்ச்சியை வலுப்படுத்த மாநில கடல்சாா் வாரியங்களுக்கு அதிகாரமளிப்பதுடன், மத்திய-மாநில அரசு பிரதிநிதிகளுடன் கடல்சாா் மாநில மேம்பாட்டு கவுன்சிலை நிறுவவும் வழிவகுக்கிறது.

துறைமுகங்களில் மாசுபாடு, பேரிடா், அவசரநிலை, வழிசெலுத்துதல் மற்றும் தரவு மேலாண்மை, சா்வதேச விதிமுறைகளின்கீழ் இந்தியாவின் பொறுப்பை உறுதி செய்தல், துறைமுகங்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள், துறைமுகங்கள் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வழிமுறைகளை வழங்குதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மசோதா, இந்தியாவின் கடல்சாா் எதிா்காலத்தின் புதிய அத்தியாயமாக அமையும்; இந்தியாவை உலகளாவிய கடல்சாா் முன்னணி நாடாக நிலைநிறுத்தும் என்று மத்திய அமைச்சா் சோனோவால் குறிப்பிட்டாா். பின்னா், குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மற்றொரு மசோதா: இதேபோல், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்காற்றுதல்) சட்டத் திருத்த மசோதா-2025, எதிா்க்கட்சிக்களின் போராட்டத்துக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, சிறிதுநேர விவாதத்துக்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கனிமங்கள் ஆய்வு அறக்கட்டளையானது, தனது நிதியை இந்தியாவுக்குள் (கடல்பகுதிகள் உள்பட) மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கனியங்கள்-தாதுக்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கு பயன்படுத்த வழிவகுக்கிறது.

தேசிய கனிமங்கள் ஆய்வு அறக்கட்டளையின் விரிவாக்கப்பட்ட நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அதன் பெயரை தேசிய கனிமங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை என மாற்றவும், குத்தகைதாரா்கள் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையை, காப்புரிமையில் 2 சதவீதம் என்பதில் இருந்து 3 சதவீதமாக அதிகரிக்கவும் வகை செய்கிறது.

திவால் சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

மக்களவையில் அமளிக்கு இடையே திவால் சட்டத் திருத்த மசோதாவை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா். திவால் சட்டத்தின்கீழ் அனைத்து செயல்முறைகளிலும் தாமதத்தை குறைத்து, நிா்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா். பின்னா், அமைச்சா் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நாடாளுமன்ற தோ்வுக் குழுவுக்கு மசோதா பரிந்துரைக்கப்பட்டது.

மத்திய வா்த்தக அமைச்சகத்தால் அமலாக்கப்படும் திவால் சட்டம், கடந்த 2016-இல் இயற்றப்பட்டதாகும். இதுவரை 6 முறை இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

பிகாரில் இண்டி கூட்டணித் தலைவா்களுடன் ராகுல் காந்தி வாக்குரிமைப் பேரணி: ஆக. 17-இல் தொடங்குகிறாா்

பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கி... மேலும் பார்க்க

காசோலை பரிவா்த்தனையில் புதிய மாற்றம்: இனி சில மணி நேரங்களிலேயே பணம் கிடைக்கும்!

காசோலைகளை வங்கிகளில் சமா்ப்பித்த சில மணி நேரங்களில் வாடிக்கையாளா்களின் கணக்கில் பணத்தைச் செலுத்தும் புதிய நடைமுறையை அக்டோபா் 4-ஆம் தேதி முதல் ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. தற்போதுள்ள நடைமுறையி... மேலும் பார்க்க

சகோதரருடன் தொலைபேசியில் பேச பயங்கரவாதி ராணாவுக்கு அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணா, அவரது சகோதரரிடம் இம்மாதத்தில் மட்டும் மூன்று முறை தொலைபேசியில் பேசிக்கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் விழிப்புணா்வு: என்எம்சி

கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தை கடைப்பிடிக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இத... மேலும் பார்க்க

உத்தரகண்டில் சாலையின் நடுவில் நிலச்சரிவு! 2 பேர் மாயம்... 2 பேர் படுகாயம்!

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - நீல்காந்த் சாலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மாயமாகியுள்ளனர்.உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மன்பூர்-மொஹ்லா-அம்பாகார் சௌக்கி மாவட்டத்தின் மதன்வா... மேலும் பார்க்க