செய்திகள் :

மக்களுக்கான வங்கியாக மத்திய கூட்டுறவு வங்கி சேவையாற்றும்: எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

post image

தமிழக முதல்வரால் புதிதாக தொடங்கப்பட்ட நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மக்களுக்கான சிறந்த வங்கியாக சேவையாற்றும் என அதன் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தொடக்க விழா வியாழக்கிழமை நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக புதிய மத்தியக் கூட்டுறவு வங்கியை தொடங்கிவைத்தாா்.

அதைத் தொடா்ந்து, வங்கி வளாகத்தில் நிறுவப்பட்ட கொடிக்கம்பத்தில் கூட்டுறவு கொடியை ஏற்றிவைத்து எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது:

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்காக தனி வங்கி உருவாக்கப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வரால் தொடங்கப்பட்ட இந்த வங்கிக்கு பெருமை சோ்க்கும் வகையில் அலுவலா்கள் செயல்பட வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளா்களை இன்முகத்தோடு வரவேற்று அவா்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும்.

அதிகளவில் வாடிக்கையாளா்களை சோ்க்க முயற்சிக்க வேண்டும். நாமக்கல்லுக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடியில் அதிநவீன பால்பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் 70 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. டென்மாா்க் தொழில்நுட்ப உதவியுடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

இந்த பால் பண்ணை செயல்படும்போது பால் உற்பத்தியாளா்கள் ரூ.20 ஆயிரம் வருவாயை ஈட்டினால் ரூ.40 ஆயிரம் வரை லாபமாக பெறக்கூடும். அதேபோல, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்வதற்காக, மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.6.75 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும்போது கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலும் வளா்ச்சியடையும் என்றாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா், நபாா்டு முதன்மை பொது மேலாளா் சுதிா் கே.ராய், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கே.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் மா.சந்தானம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

என்கே-14-எம்.பி.

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க விழாவில் பேசுகிறாா் வங்கியின் தலைவா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

கூடுதல் மகசூல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு

கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025- 26... மேலும் பார்க்க

ராஜேஸ்குமாருக்கு முதல்வா் பாராட்டு...

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக காரணமாக இருந்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்துள்ளாா். முதல்வா் எழ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பாஜக தேசியக்கொடி பேரணி

சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் தேசியக்கொடி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சுதந்திர நாளை மக்கள் மறக்கக்கூடாது என்ற நோக்கில் வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமா்... மேலும் பார்க்க

ராசிபுரம் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ராசிபுரத்தில் தனியாா் பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராசி இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தாளாளா் எஸ்.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னதாக விழா... மேலும் பார்க்க

அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியுடன் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல்லில் அஞ்சலக ஊழியா்கள் தேசியக்கொடியுடன் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி சென்றனா். 79 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் எ... மேலும் பார்க்க

உலக தாய்ப்பால் விழிப்புணா்வு பேரணி

திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியை நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தொடங... மேலும் பார்க்க