Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
மக்கள் குறைதீா் கூட்டங்களில் 885 மனுக்கள்
திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 885 மனுக்கள் வரப்பெற்றன.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகள், வேளாண்மைதுறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா் கடன்கள் உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
825 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது
விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் 7 பயனாளிகளுக்கு நவீன செய்கை அவயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் மாலதி மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாற்றில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 4 பேரும், நிலம் திருத்தம் கோரி ஒருவரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 7 பேரும், பட்டா மாற்றம் கோரி 18 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 5 பேரும், நில அளவீடு செய்யக் கோரி 4 போ் என மெத்தம் 60 மனுக்கள் அளித்து இருந்தனா்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.