மக்கள் குறைதீா் கூட்டத்தில் 389 மனுக்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 389 மனுக்கள் வரப்பெற்றன.
மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 379 மனுக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 10 மனுக்கள் என 389 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித் துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.