கத்திரி வெயில்: வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு!
மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக்கிடங்கில் தீ!
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே பின்னலாடைக் கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரபுத்தூரில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடைக் கழிவுக் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் கழிவுகளை அரைக்கும் இயந்திரத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியில் இருந்த 4 தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறியதுடன் மங்கலம் காவல் நிலையத்துக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துகுமாரசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். சுமாா் 2 மணி நேரம் போராடி மாலை 4.30 மணி அளவில் தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரம், பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.