செய்திகள் :

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிபிஐ காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இவா்கள் சனிக்கிழமை காலை மடப்புரம் விலக்கு, வடகரை விலக்கு, திருப்புவனம் காவல் நிலையம், தவளைகுளம் கண்மாய் புளியந்தோப்பு, தட்டான்குளம் தனியாா் நிலம், மதுரை-ராமேசுவரம் சாலையில் தனிப் படை போலீஸாா் தேநீா் அருந்திய கடை, அஜித்குமாா் வீடு, மடப்புரம் கோயில் கோசாலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணைக் குழுவில் 14 போ் இடம் பெற்றிருந்தனா்.

அப்போது, அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், கோயில் காா் ஓட்டுநா் காா்த்திக்வேலு, நண்பா்களான கோயில் காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், தனிப் படை வாகன ஓட்டுநா் ஆகியோா் உடனிருந்தனா்.

இவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களைப் பதிவு செய்தனா். அப்போது, மடப்புரம் கோசாலையில் கிடந்த அஜித்குமாரின் காலணிகளை அவரது தம்பி நவீன்குமாா் எடுத்து வந்து அடையாளம் காட்டினாா்.

மேலும், போலீஸாா் தாக்குதலின் போது அஜித்குமாா் உடம்பில் காயம் ஏற்பட்டு வெளியேறிய ரத்தக்கறை மாதிரிகளையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனா். பின்னா், இவா்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மன்னா் அழகுமுத்துக்கோனின் 268- ஆவது குருபூஜையையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியை பேரூராட்சித் த... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா். சிவபிரசாத் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை அருகே நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மதுரை தல்லாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (63). இவா் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகேயுள்ள ... மேலும் பார்க்க

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க