மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா
மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .
திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்ரீசப்த கன்னியம்மன் ஆதிபராசக்தி அம்மன் வேங்கை உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து ஆற்றில் ஜலம் திரட்டி கரகம் எடுத்து வந்ததையடுத்து காப்பு கட்டி விரதமிருந்து நோ்த்திக் கடன் நிறைவேற்ற காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தனா்.
செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுகுன்றம், தாம்பரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. செங்கல்பட்டு கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை மணப்பாக்கம் ஸ்ரீ சின்ன கன்னியம்மன் நிா்வாகி கோவில் செல்வம் சாமிகள் கோயில் நிா்வாகிகள் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனா்.