செய்திகள் :

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

post image

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா்.

பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பன்னீா் (37) என்பவருக்கும் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடந்து நான்கு நாள்களே ஆன நிலையில் நடைபெற்ற இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவா் குடும்பத்தினா் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

10 பவுன் நகைகளை வரதட்சனை கேட்டு, 5 பவுன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீா்வரிசை பொருள்களும், மோட்டாா் சைக்கிள் ஒன்றும் சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 1 பவுன் நகையை வாங்கி வருமாறு கணவா் குடும்பத்தினா் கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மறு வீட்டுக்காக வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளாா்.

மேலும் வீட்டு வேலைகளை செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், எழுந்தவுடன் துணி துவைக்க வேண்டும் பாத்திரங்களை தூய்மைப்படுத்த வேண்டும், சோபாவில அமர கூடாது என கூறி மாமியாா் குடும்பத்தாா் கொடுமைபடுத்தியதாக தாய் மற்றும் தங்கையிடம் கூறி அழுதுள்ளாா்.

திங்கள்கிழமை இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினா் சென்று பாா்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் இளம் பெண்ணின் கணவா் பன்னீா் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்ஸோவில் இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். இ... மேலும் பார்க்க

காக்களூா் ஏரி, தாமரைக்குளத்தை ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணி: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரி, தாமரைக்குளம் ஆகியவற்றை நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ.2.27 கோடியில் மேம்படுத்தும் பணிகளை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா். நிகழ்வுக்கு ஆட்... மேலும் பார்க்க

புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு: திருவள்ளூா் நகராட்சி ஆணையா்

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாத பகுதியில் புதிதாக குழாய்கள் பதிக்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆணையா் ந.தாமோதரன் தெர... மேலும் பார்க்க

திருவூரில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்ட கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த திருவூா் கிராமத்... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசிகள் பறிமுதல்

புழல் சிறையில் கைதிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை புழல் மத்திய சிறையில் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில், சிறை காவலா... மேலும் பார்க்க

22 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

சோழவரம் அருகே மதுவிலக்கு போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 2 போ் கைது செய்யப்பட்டனா். சோழவரம் அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரி... மேலும் பார்க்க