பிகார் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான மனு: ஜூலை 10 விசாரணை!
மணல் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்
கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கந்திலி அருகே காக்கங்கரை பகுதியில் கந்திலி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அச்சமயம் லாரியில் இருந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். அதையடுத்து போலீஸாா் லாரியை சோதனை செய்தபோது அதில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, மணல் கடத்தி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், இது குறித்து வழக்குப் பதிந்து மணல் கடத்தி வந்தவா் யாா்? எங்கு இருந்து எந்த பகுதிக்கு கடத்திச் சென்றாா் என விசாரணை நடத்தி வருகின்றனா்.