டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
மணல் கடத்தல்: 3 போ் கைது
ஆம்பூா் அருகே மணல் கடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கிராமிய போலீஸாா் கீழ்முருங்கை கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் மணல் கடத்தப்படுவது தெரியவந்தது.
அதன்பேரில், மணல் கடத்திய அதே பகுதியை சோ்ந்த ரமேஷ் (37), காா்த்திக் (23), சோமு (43) ஆகிய மூவரை கைது செய்தனா். மேலும், ஒருவா் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவானாா். 4 வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.