செய்திகள் :

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

post image

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார்.

மணிப்பூரின் பாஜக எம்எல்ஏக்கள் 2001ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மாநிலத்தில் எல்லை நிர்ணயம் மேற்கொள்வதற்கு முன்பு தேசியக் குடியுரிமைப் பதிவேடு (என்ஆர்சி)யில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிய ஒரு நாளுக்குப் பிறகு, பிரேன் சிங் தன் கருத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்தான் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு காரணம். இதனால் மணிப்பூரில் வன்முறை கலவரமாக மாறியது. இதில் 250-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பலர் தங்களது வீடுகளை இழந்தனர்.

நாம் ஒரு முழுமையான மாநிலமாக மாறுவதற்கு முன்பே, ஆயிரக்கணக்கான அகதிகள் அப்போது அதிகாரிகளின் உத்தரவுக்கிணங்க மணிப்பூரில் குடியேறினர். 1960-க்கு மேல் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வுக்கான உதவி வழங்கப்பட்டதாக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

அந்தக் குடும்பங்களுக்கு என்ன ஆனது? அவர்கள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டனர்? அதன் பிறகு எத்தனை தலைமுறைகள் வளர்ந்துள்ளன? அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனவா?” இந்தக் கேள்விகள் பொதுக் களத்தில் முழுமையாகப் பேசப்படவில்லை, மேலும் பல ஆண்டுகளாக மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு மாறியிருந்தாலும், இந்தப் பிரச்னை பெரும்பாலும் பேசப்படாமல் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக அரசின் மீது பழி சுமத்தாமல், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அதன் தாக்கங்களைப் பற்றிச் சிந்தித்து, நியாயமான, சமநிலையான பாதையை முன்னோக்கி வகுக்கவேண்டும். ஏனெனில் இந்தப் பிரச்னை தொலைநோக்கு விளைவுகளைக் கொண்டுள்ளது, மாநிலத்தின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் கூறினார்.

ம.பி. கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீது தாக்குதல்: மக்களவையில் எதிா்க்கட்சி வெளிநடப்பு

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூா் மாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியாா்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். மக்களவை... மேலும் பார்க்க

ரேவந்த் ரெட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்ததா? நீதிபதிகள் கேள்வி

‘நீதிமன்ற தீா்ப்பு குறித்து ஏற்கெனவே சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்காமல் உச்சநீதிமன்றம் தவறு செய்துவிட்டதா’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் வியாழ... மேலும் பார்க்க

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி: மக்களவையில் தீா்மானம் நிறைவேற்றம்

மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உறுதி செய்யும் அரசமைப்புச் சட்ட தீா்மானம், மக்களவையில் புதன்கிழமை நள்ளிரவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிா்க்கட்சிகளும் இத்தீா... மேலும் பார்க்க

பரஸ்பர வரி விதிப்பு: இந்திய பொருளாதாரத்தை முழுமையாக பாதிக்கும் - ராகுல்

‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக சீரழிக்கும் அபாயம் உள்ளது; மேலும், இந்திய நிலப்பரப்பில் 4,000 சதுர கி.மீ. பரப்புக்கு மேல் சீன எடுத்த... மேலும் பார்க்க

சொத்து விவரங்களை வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவு

தங்களிடம் உள்ள சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா். இந்த விவரங்கள் முதல்கட்டமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் வழங்கப்படவுள்ளது. அத... மேலும் பார்க்க

இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

பாங்காக்: டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்பட இந்தியா-தாய்லாந்து இடையே 5 ஒப்பந்தங்கள் வியாழக்கிழமை கையொப்பாகின. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமா் பேடோங்டாா... மேலும் பார்க்க