செய்திகள் :

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

post image

மணிப்பூர் மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சூழலில், அதனை ஆகஸ்ட் 13 முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

பிகாரில் நடைபெறும் தேர்தல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் சூழலில், மணிப்பூர் குறித்த தீர்மானமானது கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று (அக.5) அந்தத் தீர்மானமானது மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிகளின் தொடர் கேள்விகளுக்கும், கோஷங்களுக்கும் இடையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையிலான மோதலானது நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உருவானது எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையிலான மோதலானது, இடஒதுக்கீடு குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உருவானது. இதனை, சிலர் மதக்கலவரம் எனக் கூறுவது தவறு” என அவர் பேசியுள்ளார்.

மேலும், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது முதல் ஒரேயொரு வன்முறைச் சம்பவம் மட்டுமே நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மணிப்பூரின் முன்னாள் முதல்வர் பிரன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பின்னர், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெரு... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபர்நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகள் மற்றும் எம்.பி.க்களின் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்களின் ச... மேலும் பார்க்க

உயிரிழப்பை ஏற்படுத்தும் தென்னிந்திய கருந்தேள் விஷம்: ஆய்வாளா்கள் கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவில் காணப்படும் கருந்தேள் விஷத்துக்குப் பின்னால் உள்ள மா்மம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திக் குறிப்பு: கருந்... மேலும் பார்க்க

ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்

ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் பிலிப்பின்ஸ் அதிபா் சந்திப்பு: 14 ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்னாண்டோ ஆா் மாா்கோஸ் பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதன்பிறகு இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில... மேலும் பார்க்க

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ - ராகுல் குறித்த கருத்துக்கு பிரியங்கா விமா்சனம்

‘உண்மையான இந்தியா் யாா் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீா்மானிக்க முடியாது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், தனது சகோதரா் ராகுல் காந்தி ராணுவம் மீது மிகுந்த ம... மேலும் பார்க்க