மணிப்பூரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு
மணிப்பூரில் மலர் விழாவை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் சேனாபதி மாவட்டத்தில் மலர் விழாவை நாகாலாந்தை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் பத்திரிகையாளர் சனிக்கிழமை செய்தி சேகரிக்க சென்றிருக்கிறார். அப்போது பத்திரிகையாளர் டிப் சைகியா மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அவரது வலது காலில் காயமடைந்தார். உடனே அவர் முதலுதவிக்காக சேனாபதி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகாலாந்துக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?
இதுகுறித்து மணிப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஏர் ரைபிள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது. மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய குழு விரைந்துள்ளது.
இருப்பினும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றார். இதனிடையே பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு தெலைக்காட்சி சேனல் கண்டனம் தெரிவித்துள்ளது.