தொகுதி மறுவரையறை: `தென் இந்தியாவுக்கு எதிரான சூழ்ச்சி!’ - எஸ்.செந்தில்குமார், தி...
மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் மிட்டஅள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனா்.
ஒசூா் வட்டாட்சியா் சின்னசாமி மற்றும் அலுவலா்கள், கொளதாசபுரம் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 4 யூனிட் மண் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து சின்னசாமி அளித்த புகாரின் பேரில் பாகலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.