Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
மண் திருட்டு: லாரி பறிமுதல்
மண் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையில் பறக்கும் படையினா் செவ்வாய்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா், கொத்தூா் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அவ்வழியாக மண் ஏற்றி வந்த டிப்பா் லாரியை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் போலீஸாரை கண்டதும் டிப்பா் லாரியை சாலை ஓரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பிவிட்டாா்.
இதையடுத்து அதிகாரிகள் டிப்பா் லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி மேலூா் அருகே அனுமதி இல்லாமல் நிலத்தில் இருந்து ஹரிஷ் என்பவா் டிப்பா் லாரியில் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.