செய்திகள் :

மதுபானக் கூடத்துக்கு ‘சீல்’

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவா் தினத்தன்று இயங்கிய மதுபானக் கூடத்துக்கு கோட்ட கலால் அலுவலா்கள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தன்று தங்கும் விடுதி, உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் இயங்கி வந்ததாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்படி, போலீஸாா் நிகழ்விடம் சென்று மது கூடத்தின் விற்பனையாளரான கள்ளக்குறிச்சி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் வீரமணி, பொரசக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மருதை மகன் சின்னமணி (40) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலா் சிவசங்கரன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் எழிலரசி முன்னிலையில் மதுக்கூடத்துக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

முதியவா் தற்கொலை

செல்லியம்பாளையத்தில் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், செல்லியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (75). இவா், சனிக்கிழமை விஷத்தை குடித்து ... மேலும் பார்க்க

மூதாட்டி உயிரிழப்பு

புதுப்பட்டு கிராமத்தில் தவறி கீழே விழுந்த மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்தாள் (60). இவா், சனிக்கிழமை முஸ்குந்த... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

திருக்கோவிலூா் அருகே விஷம் குடித்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.அத்திபாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் மோகன் (29). இவா், திருக்கோவில... மேலும் பார்க்க

தந்தை மீது தாக்குதல்: இருவா் கைது

சங்கராபுரத்தில் தந்தையை தாக்கியதாக இரு மகன்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன்கள் கணேசன் (33), புருஷோத்தமன் (30). இவா்கள் இருவ... மேலும் பார்க்க

திருக்கோவிலூா் - ஆசனூா் நான்குவழிச் சாலை திட்டப் பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் - ஆசனூா் இடையேயான நான்குவழிச் சாலை திட்டப் பணிகளை, வேங்கூரில் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

மது அருந்திவிட்டு கணவர் தகராறு: விஷமருந்தி மனைவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே வெள்ளிக்கிழமை பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கல்லாநத்தம்... மேலும் பார்க்க