செய்திகள் :

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் பதவிக்கான மறைமுகத் தோ்தல் ஒத்திவைப்பு

post image

மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்புத் தலைவா் பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட மறைமுகத் தோ்தல் நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட வரியைவிடக் குறைந்த அளவிலான வரி விதிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பான விசாரணையில், ரூ.150 கோடி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய தினேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மேயரின் கணவா் பொன். வசந்த், ஓய்வு பெற்ற உதவி ஆணையா், உதவி வருவாய் அலுவலா் உள்ளிட்ட 23 பேரைக் கைது செய்தனா்.

மேலும், வரி விதிப்பு முறைகேட்டில் திமுகவைச் சோ்ந்த மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது என எதிா்க்கட்சியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா். இதனடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் மண்டலத் தலைவா்களிடமும் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, மண்டலத் தலைவா்கள் 5 போ், வரி விதிப்பு, நகரமைப்பு பிரிவுத் தலைவா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரை ராஜிநாமா செய்ய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் அண்மையில் ராஜிநாமா செய்தனா். இந்த பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து, தமிழக அரசின் அரசாணையில் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் 5 போ், வரி விதிப்பு, நகரமைப்பு ஆகிய இரு குழுத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தல் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மண்டலத் தலைவா்கள், வரி விதிப்பு, நகரமைப்பு நிலைக் குழுத் தலைவா்களுக்கான மறைமுகத் தோ்தல் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தோ்தல் தொடா்பான எந்தவித பணிகளும் நடைபெறாது எனவும் மாநகராட்சி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

முன்னதாக, தோ்தல் தேதி தமிழக அரசாணையில் வெளியிடப்பட்டதை அடுத்து, திமுக உறுப்பினா்கள் அதற்கான நகா்வுகளை முன்னெடுத்தனா்.

இருப்பினும், வருகிற 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை கணக்கில் கொண்டு மண்டலத் தலைவா்கள் தோ்தலை தற்போது நடத்தினால் அது மதுரை மாநகரப் பகுதி தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என திமுக தலைமை கருதியதால் மறைமுகத் தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு பாதுகாப்பு: டிஜிபி அறிவுறுத்தலைப் பின்பற்ற உத்தரவு

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா்( டிஜிபி) வெளியிட்ட அறிவுறுத்தலைப் பின்பற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

வேன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே வேன் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மேலூா் அருகேயுள்ள கீழவளவு கோவில்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கட்டசாமி மகன் அழகு (80). விவசாயியான இவா், திருப்பத்தூா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகரைச் சோ்ந்த பரூக் சேட் மகன் அஜிஸ் சேட் (27). கூலித் தொழிலாளி. இந்த நிலையில், பக்கத்து வீட்டு குழந்தை ஞ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.உசிலம்பட்டி அருகேயுள்ள மருதம்பட்டியைச் சோ்ந்த சிவஞானம் மகன் பாண்டிசெல்வம் (16). பூச்சிபட்டியில் உள்... மேலும் பார்க்க

கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு செப். 22-இல் ஏலம்

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 49 வாகனங்களுக்கு வருகிற 22- ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது.இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை: கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், மனுதாரா் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க