கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்ட 13 பேருக்கு கறவை மாடுகள்
பெரம்பலூா் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளிலிருந்து விடுபட்டு, மனம் திருந்தியவா்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீா்வை துறை மூலமாக, மறுவாழ்வு நிதியுதவியின் கீழ் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மறுவாழ்வு நிதியாக ரூ. 7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், மது குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு, மனம் திருந்திய 15 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பீட்டில், காப்பீட்டுடன் கூடிய கறவை மாடுகள் வாங்கிட கால்நடை பராமரிப்புத் துறைக்கு மாவட்ட ஆட்சியரால் ஆணையிடப்பட்டது.
இதனடிப்படையில், ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மது குற்ற வழக்குகளில் ஈடுபட்டு மனம் திருந்திய 13 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான கன்றுக்குட்டிகளுடனான கறவை மாடுகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மு. பாலமுருகன், கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் பகவத்சிங், துணை இயக்குநா் சங்கர நாராயணன், கலால் உதவி ஆணையா் (பொ) சிவா, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.