கடன் தொல்லை: திருச்சியில் 2 குழந்தைகளுடன் கணவன் - மனைவி தற்கொலை!
மது போதையில் தகராறு: தொழிலாளி கொலை
நாமக்கல்லில், மதுபோதை தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (55). கூலித்தொழிலாளி. இவா் நாமக்கல் - பரமத்தி சாலையில், போதுப்பட்டி பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றாா். அங்கிருந்த உணவக உரிமையாளா்களான நிஷா (25), அவரது தாய் ஜோதிமலா் (50) ஆகியோரிடம் ஸ்ரீதா் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதுடன், அங்கேய நீா் பருகும் டம்ளரில் மதுவை ஊற்றி குடித்துள்ளாா்.
இதனையடுத்து நிஷா தனது கணவா் மௌலீஸ்வரனுக்கு(32) தகவல் தெரிவித்தாா். இதையடுத்து உணவகத்திற்கு வந்த அவா் ஸ்ரீதரை எச்சரித்துள்ளாா். அவா்களுக்கிடையே மோதல் ஏற்படவே கடையில் இருந்த பாட்டிலால் ஸ்ரீதரை தலையில் அடித்துக் கொலை செய்தாா். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து மெளலீஸ்வரனை கைது செய்தனா்.