மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் திங்கள்கிழமை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி எடமலைபட்டிபுதூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் கி. முருகன் (25). இவா், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 2022 ஜூலை 12-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில், மத்திய சிறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் சிறை வளாகத்தில் கஞ்சா புழக்கம் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில், கைதி முருகனிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில், கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.