'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
மயங்கி விழுந்த மீனவா் உயிரிழப்பு
கடலூா் அரசு தலைமை மருத்துவமனை வெளியே மயங்கி விழுந்த மீனவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பம், தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் கனிகண்ணன் (48), மீனவா். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனா். கனிகண்ணன் தொடா்ந்து மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாா். இதையடுத்து, அவரை உறவினா்கள் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.
மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்த கனிகண்ணன், மருத்துவமனை ஊழியா்களுக்கு தெரியாமல் வெளியேறி, கடலூா் - நெல்லிக்குப்பம் சாலையில் மயங்கிக் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, மீண்டும் அரசு மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்தவா், கனிகண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.