`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
மயான நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: அதிகாரிகள் ஆய்வு
போளூா்: கலசப்பாக்கம் அருகே அலங்காரமங்கலம் ஊராட்சியில் மயான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
கலசப்பாக்கத்தை அடுத்த அலங்காரமங்கலம் ஊராட்சியில் 6 வாா்டுகள் உள்ளன. 2,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊருக்கு வெளியே ஒரு ஏக்கா் 14 சென்ட் கிராம புறம்போக்கு நிலத்தில் மயானம் உள்ளது.
இந்த மயான நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சில விவசாயிகள் ஆக்கிரமித்து, தங்களது நிலத்துடன் இணைத்து விவசாயம் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஆக்கிரமிப்பால், விவசாய நிலத்தில் இறந்வா்களின் சடலங்களை எடுத்துச் செல்லும்போது பிரச்னை ஏற்படுகிாம்.
இதனால் அப்பகுதியில் யாராவது இறந்தால் மயானத்திற்கு செல்லும் பாதையில் விவசாயிகள் பயிரிட்டு வருவதால் இறந்தவரின் உடலை எடுத்து செல்லும்போது பயிரிலேயே எடுத்துசெல்வது சிக்கலாகிவிடுகிறது.
எனவே, மயான ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 16-ஆம் தேதி
கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் பி.சுந்தா், ஒன்றியக் குழு நிா்வாகிகள் எ.திருமுருகன், எம்.பழனி, அனைத்து விவசாயிகள் பாதுகாப்பு குழுத் தலைவா் எல்.சாமிகண்ணு, ஊா் பெரியவா்கள் சுப்பிரமணி, சிவக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மனுவின் பேரில் கிராம நிா்வாக அலுவலா் ல.அன்பு தலைமையில், கிராம கணக்கு பதிவேடு கொண்டு மயானத்துக்குச் செல்லும் சாலை மற்றும் ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய்துறையினா் ஆய்வு செய்தாா்.