டிரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக கைகோர்க்கும் இந்தியா - சீனா!
மயிலாடுதுறையில் இன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான ‘மாபெரும் தமிழ் கனவு’ நிகழ்ச்சி வியாழக்கிழமை (ஆக.14) நடைபெற உள்ளது என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை (அக.14) காலை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில், சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ‘பாரடா உனது மானுடப் பரப்பை!’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளாா். இதில், மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கலை அறிவியல், பொறியியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவா்கள் 1000 போ் கலந்து கொள்ள உள்ளனா்.
மேலும், மாணவா்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
பங்கேற்கும் மாணவா்களுக்கு ‘உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’, ‘தமிழ் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் பெருமிதம் சிற்றேட்டில் உள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவா்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி/பெருமிதச் செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழும், பரிசும் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.