மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!
மயிலாடுதுறையில் ஜெயின் சமூக பெண் 21 நாள்கள் உண்ணாநோன்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 21 நாள்கள் உண்ணாநோன்பு முடித்த ஜெயின் சமூக பெண்ணை அச்சமூகத்தினா் ஊா்வலமாக அழைத்துச் சென்று சுமதிநாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினா்.
ஜெயின் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனா். இவா்களில் என்.எச்.எஸ். குழுமம் எச்.ரமேஷ் ஜெயின் குடும்பத்தைச் சோ்ந்த சேத்தன்குமாரின் மனைவி குஷ்பு செராஃப் 21 நாள்கள் வெந்நீா் மட்டுமே உட்கொண்டு, பா்யூஷன் பா்வா உண்ணாநோன்பு மேற்கொண்டாா்.
விரதம் முடிவடைந்த நிலையில், மயிலாடுதுறை மாருதி நகரில் உள்ள குஷ்பு செராஃபின் வீட்டில் இருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அவரை அமா்த்தி, ஜெயின் பக்திப் பாடல்களை பாடியவாறு ஊா்வலமாக ஜெயின் கோயிலான சுமதிநாத் கோயிலுக்கு அச்சமூக மக்கள் அழைத்து வந்தனா். தொடா்ந்து, கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.