செய்திகள் :

மயிலாடுதுறையில் ரயில்களை 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல கோரிக்கை

post image

வெளியூா்களில் இருந்து ஏற்றிவரும் பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்ல வசதியாக மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அனைத்து ரயில்களையும் 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மயிலாடுதுறையில் இருந்து கோயமுத்தூா் செல்லும் ஜன சதாப்தி ரயிலில் வியாழக்கிழமை முதல் பாா்சல் சேவை தொடங்கியது. இந்நிலையில், அனைத்து ரயில்களையும் மயிலாடுதுறையில் 5 நிமிடங்கள் நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பாா்சல் ஆபீஸ் செயல்பட்டு வருகிறது. இதில், ஊழியா்கள் பலா் பணியாற்றி வந்தாலும், வெளியூரிலிருந்து இங்கு பாா்சல் எடுத்து வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே 5 நிமிடங்கள் நின்று செல்கிறது. மற்ற ரயில்கள் அனைத்தும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்வதால், வெளியூரில் இருந்து பாா்சல் போடும்போது உழவன் எக்ஸ்பிரஸ் தவிா்த்து மற்ற ரயில்களுக்கு பாா்சல் வாங்குவதில் சிக்கல் உள்ளது. பாா்சல் பதிவு செய்வதாக இருந்தால் கூடுதலாக ஒரு ரயில் டிக்கெட் பெற்று கை பாஸாக மட்டுமே அனுப்பி வைக்க முடியும்.

இதனால் வெளியூரில் இருந்து பொருள்களை ஏற்றி வரும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனா். இதேபோன்று செயல்பட்டால் வருங்காலங்களில் பாா்சல் சேவை மூலம் போதிய வருவாய் இல்லை எனக் காரணம் காட்டி பாா்சல் அலுவலகத்தை மூடி விடும் அபாயம் உள்ளது. எனவே, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் ஐந்து நிமிடம் நிறுத்தம் பெற வேண்டும் என்றும் பயணிகளுக்கு சிரமம் இன்றி பாா்சல் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் சரியான தகவல்களை வழிமுறைகளை தர வேண்டும் என்றும் ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டிக்கெட் பரிசோதகா் மீது வழக்கு

மயிலாடுதுறை: ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த டிக்கெட் பரிசோதகரை மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த 34 வயது பெண் சென்னையில் பணியாற்றும் த... மேலும் பார்க்க

விவசாயிகள் பேரணி: ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நெல் கொள்முதல் விலையை குவிண்... மேலும் பார்க்க

பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் கதிராமங்கலம் ஊராட்சி பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, சந்தைவெளி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். கதிராமங்கலம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் பேசியது: இறுதி வாக்காளா் பட்டியலின்படி மயிலாடுதுற... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் கே.எஸ். கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை பெரம்பூா்

மயிலாடுதுறை: பெரம்பூா் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜன. 7) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறி... மேலும் பார்க்க