2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
மயிலாடுதுறை: அஞ்சலகங்களில் ஆக.2-ல் பரிவா்த்தனை கிடையாது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்திய தபால் துறையின் மென்பொருள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிமுதல் தரம் உயா்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயா்த்தப்பட்ட மென்பொருள் க்யூ.ஆா். கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்த சனிக்கிழமை (ஆக.2) பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் இதற்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் அஞ்சல் சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கு இருப்பு, பணம் எடுப்பது ஆகிய சேவைகள் மற்றும் பதிவு தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகள் பெற இயலாது. எனவே வாடிக்கையாளா்கள் தங்கள் தபால் பரிவா்த்தனையை முன்திட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.