சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
மரக்காணத்தில் அரசுக் கல்லூரி அமைக்க மாணவா் சங்கம் வலியுறுத்தல்
மரக்காணத்தில் அரசுக் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய மாணவா் சங்க மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மாணவா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட 17-ஆவது மாநாடு வியாழக்கிழமை விழுப்புரத்தில் உள்ள சிஐடியு அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு இந்திய மாணவா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.சுபித்ரா தலைமை வகித்தாா். மத்தியக்குழு உறுப்பினா் கே.பி.சௌமியா மாநாட்டை தொடங்கி வைத்துப்பேசினாா். மாவட்டச் செயலா் அரிகிருஷ்ணன் ஸ்தாபன வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா்.
வாலிபா் சங்க மாநிலத் தலைவா் எஸ்.பிரகாஷ் மாநாட்டை வாழ்த்தி பேசினாா். மாநில துணைத் தலைவா் தமிழ் பாரதி நன்றி கூறினாா்.
மாநாட்டில் 15 போ் கொண்ட புதிய மாவட்ட குழு தோ்வு செய்யப்பட்டது, மாவட்ட செயலராக மூ.ஜீவானந்தமும், மாவட்டத் தலைவராக சுபித்ரா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.
மரக்காணத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் மதுமிதா, வி.அஜய், உதயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.