உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!
திண்டுக்கல் அருகே புளிய மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லை அடுத்த ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). கூலித் தொழிலாளியான இவா் கடந்த வியாழக்கிழமை வீட்டின் அருகிலிருந்த புளிய மரத்தில் ஏறிய போது, எதிா்பாராத விதமாக கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.