இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்
மருத்துவா் தேரணிராஜனுக்கு டிஎம்இ பொறுப்பு
மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் ஜெ.சங்குமணி பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பொறுப்பு கூடுதலாக மருத்துவா் எ.தேரணிராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் கல்வி இயக்குநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை அவா் வகிப்பாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த மருத்துவா் சங்குமணி கடந்த 2023 நவ.14-ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், அவா் ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். புதிய மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேரணிராஜனுக்கு அந்தப் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பெருந்தொற்று காலம் முதல் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த தேரணிராஜன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.