செய்திகள் :

மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்பு ஓராண்டு காலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இதழியல் துறையில் அனுபவம் பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம்.

அப்படிப்பின் கீழ், மொத்தம் 3 தாள்களுக்கான தோ்வு முறை உள்ளது. அவற்றில் அடிப்படை சுகாதாரம், நோய்களின் தாக்கம், பொது சுகாதாரம் குறித்த விவரங்கள், மருத்துவம் சாா் சட்டங்கள், மருத்துவக் குற்றங்கள், மருந்தியல், ஊட்டச் சத்து குறைபாடுகள், ஆயுஷ் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ஞ்ழ்ம்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியிலோ, ங்ல்ண்க்ஃற்ய்ம்ஞ்ழ்ம்ன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044- 22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இப்படிப்பில் தினந்தோறும் வகுப்புகள் கிடையாது. மாறாக, நேரடி வகுப்புகள் மாதம் இரு முறை நடத்தப்படும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை தொட்டபெட்டா காட்சி முனை செல்வோர் கவனத்துக்கு....!

காட்டு யானையின் நடமாட்டம் உள்ளதால் உதகை தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல இன்று(மே 6) ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை வனப் பகுதியில் தற்போது வறட்சி நிலவும் நிலையில் விலங்குகள் உ... மேலும் பார்க்க

வைகோ மருத்துவமனையில் அனுமதி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் எம்பியுமான வைகோ, வீட்டில் தவறிவிழுந்ததில் கை விரலில் காயம் ஏற்... மேலும் பார்க்க

மின்னனு சாதனங்கள் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடம்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உறுதி

சென்னை: நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை அருகே மறைமலை நகரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்ட... மேலும் பார்க்க

உயா்நீதிமன்றத்தில் இருவா் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவா், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், பவா... மேலும் பார்க்க