டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!
மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்
கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருகே உள்ள பொரணி பகுதியைச் சேர்ந்த சிவாஜி(வயது: 40) , மாயவன் (வயது: 24), வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது: 44) ஆகிய மூவரும் கட்டுமான பணிகளை செய்து வந்தனர்.

அப்போது, எதிர்பாரதவிதமாக, பொன்னுசாமி வீடு அருகே உள்ள மஞ்சுளா என்பவரது மண் வீடு நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக திடீரென இடிந்து சரிந்து விழுந்தது. இதில், சிவாஜி இடிப்பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, கரூர் தீயணைப்பு துறைக்கு கொடுத்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த ராஜேந்திரன், மாயவன் ஆகிய இருவரையும் மீட்டனர்.
இதில், ராஜேந்திரன் என்ற தொழிலாளிக்கு தலையில் காயமும், மாயவன் என்ற தொழிலாளிக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில், அவர்கள் இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது, மண் சரிந்து விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
