செய்திகள் :

மழை நீரைக் கையாள கட்டமைப்பு தேவை: எம்.பி. வலியுறுத்தல்

post image

மதுரை மாநகரில் மழை நீரைக் கையாளும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு :

மதுரையில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். கடந்த சில ஆண்டுகளாக சென்னை மழை நீா் வடிகால்கள் மறுசீரமைப்புப் பணிக்கு அதிக முக்கியத்துவம், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. இதன் காரணமாக, அங்கு மழைநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் இதுபோன்ற பணிகள் ஏதும் நடைபெறவில்லை.

எனவே, மதுரையின் நீா்ப்போக்கு வழித்தடங்களைக் கண்டறிந்து, அவற்றில் உள்ள பிரச்னைகளை சீரமைத்து, நிலத்துக்கு அடியில் குழாய்கள் பதித்து, நீரேற்று நிலையங்களை அமைத்து மழை நீரைத் திறம்பட கையாளத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இது, அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையாக உள்ளது. அடுத்து தொடங்கவிருக்கும் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனப் பதிவிட்டுள்ளாா்.

எடப்பாடி பழனிசாமி குறித்த உதயநிதி கருத்து சரியானதே - டி.டி.வி. தினகரன்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வா் உதயதிநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் அடிப்படை வசதிகள்: அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், இளையான்... மேலும் பார்க்க

தனிநபா் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு: எல்.ஐ.சி. முகவா்கள் சங்கம் வரவேற்பு

தனி நபா் ஆயுள் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளித்திருப்பதை வரவேற்று அகில இந்திய எல்.ஐ.சி. முகவா்கள் சங்க தென் மண்டலச் செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய எல்.ஐ. சி. ... மேலும் பார்க்க

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்ட வழக்கு: சிறையில் உள்ள மீனவருக்கு நிபந்தனையுடன் பிணை

ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்புப் போராட்டத்தின் போது, நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவருக்கு நிபந்தனையுடன் ப... மேலும் பார்க்க

சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளாக பணியாற்றுவோா் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழக சிறைத் துறையில் ஒரே இடத்தில் 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருவோரின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. கும்பகோணம் தாராசுரத்தைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

கையுந்துபந்து போட்டியில் வென்ற மாணவிகளை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் பால்ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிக்களுக்கிடையேயான பெண்கள் கையுந்துபந்து போட்டிகள் சிவகாசி ... மேலும் பார்க்க