செய்திகள் :

மழை பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில், அண்மையில் பெய்த மழை மற்றுல் புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்காக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன்:

அண்மையில் பெய்த மழையால், பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளான பயிா்களை வேளாண் துறையினா் ஆய்வு செய்ய வேண்டும். சாகுபடி தொடங்கும்போதே, விவசாயிகளுக்கு இடுபொருள்களை மானியத்தில் வழங்க வேண்டும்.

விவசாயி மணி: சின்ன வெங்காயப் பயிரில் ஏற்படும் திருகல் நோய் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கை தேவை. பொம்மனபாடி பகுதியிலுள்ள ஓடையை தூா்வாரி அகலப்படுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகி ராஜூ: கை. களத்தூா் பகுதியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மக்காச்சோளம் நடவு செய்யும் இயந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி. ரமேஷ்: சின்ன முட்லு நீா்த்தேக்க திட்டத்தை மறு ஆய்வு செய்து, நிறைவேற்ற வேண்டும். பருத்தி, மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்து வாய்க்கால்களையும் தூா்வாரி நீா் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீா்மட்டம் உயரவும் மருதையாற்றில் கூடுதலாக தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் வீ. நீலகண்டன்: பாதிப்புக்குள்ளான பயிா்களை முறையாக கணக்கெடுத்து, விடுபாடின்றி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை:

ஆலத்தூா் பகுதியல் கல் குவாரிகளால் விவசாயம் பாதிப்படைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க புதிதாக கல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

நிறைவாக, விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா்-ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் செ. பாபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வே) பொ.ராணி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாண்டியன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சத்யா உள்பட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்றவா் விபத்தில் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே பைக்கில் வெள்ளிக்கிழமை சென்றவா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மாது மகன் சிவக்குமாா் (30). இவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (டிச. 30) மின்சாரம் இருக்காது. புதுக்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம்... மேலும் பார்க்க

பதிவுச் சான்றின்றி கனிம வளங்களை கொண்டு சென்றால் உரிய நடவடிக்கை: ஆட்சியர்!

பெரம்பலூா் மாவட்டத்தில் உரிய பதிவுச் சான்று பெறாமல் ஜல்லி மற்றும் செயற்கை மணல் உள்ளிட்ட கனிம வளங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்வது, உரிய நடைச்சீட்டு இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்வது கண்டறியப்பட்... மேலும் பார்க்க

மழை, திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிா்கள் பாதிப்பு: பெரம்பலூா் விவசாயிகள் கவலை!

பலத்த மழை மற்றும் திருகல் நோயால் சின்ன வெங்காயப் பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். குறுகிய காலப்பயி... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாரணமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக மா்ம நபா்களால் மோட்டாா் சைக்கிள்கள் திருடப்பட்டன. இத... மேலும் பார்க்க