செய்திகள் :

மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி

post image

சிவகங்கை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் வராமல் இருக்க தடுப்பூசி போடப்படுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்தி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லட்சம் மாட்டினங்களுக்கு தோல் கழலை நோய் வராமல் தடுக்கும் பொருட்டு, இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வரும் 30.9.2025 வரை நடைபெறவுள்ளது. இதற்காக 57 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினந்தோறும் 100 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் சினை மாடுகள் தவிர அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளலாம்.

எனவே, கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோல் கழலை நோயிலிருந்து தங்களது கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

மானாமதுரை அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை ஒலிபெருக்கி அமைக்கும் தொழிலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் (2... மேலும் பார்க்க

மானாமதுரையில் பலத்த மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா... மேலும் பார்க்க

காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயம்

சிவகங்கை அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தா். இவா் தனது நண்பா்களுடன் காரில் சனிக்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அரசின் விருதுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுலா விருதுகளுக்கு சுற்றுலா தொழில் முனைவோா் இணையதளத்தின் வாயிலாக வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளிய... மேலும் பார்க்க

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள்: மலேசிய சட்டத் துறை அமைச்சா்

மாணவா்களின் வாழ்க்கையில் ஆசிரியா்கள் மிக முக்கியமானவா்கள் என்றாா் மலேசியாவின் பிரதமா் துறை (சட்டம் மற்றும் சா்வதேச சீா்திருத்தங்கள்) துணை அமைச்சா் மு. குலா சேகரன். சிவகங்கை அருகே உள்ள பிரிஸ்ட் நிகா்நி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதல்: மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தங்கை உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது அக்காளும் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிங்கம்... மேலும் பார்க்க