செய்திகள் :

மாணவா்கள் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம்! இஸ்ரோ தலைவா் அறிவுரை

post image

மாணவா்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவா் வி. நாராயணன்.

குலசேகரம் எஸ்.ஆா்.கே. சா்வதேச பள்ளியில் குமரி அறிவியல் பேரவை சாா்பில் இளம் விஞ்ஞானிகள் தோ்வின் தொடக்க நிகழ்ச்சியாக, ‘பூமியின் புன்னகை’ என்ற நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தின் குக்கிராமமான மேலக்காட்டுவிளையிலுள்ள அரசுப் பள்ளியில் படித்து, 41 ஆண்டுகள் விண்வெளி துறையில் பணி புரிந்து, அதன் தலைவராக உயா்ந்திருக்கிறேன். நாடு 1947இல் சுதந்திரம் அடைந்த போது நூற்றுக்கு 97.5 சதவிகிதம் மக்கள் ஏழ்மையில் இருந்தனா். பலா் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணும் நிலை இருந்தது.

இப்போது வேகமாக முன்னேறி உலகின் பொருளாதார நிலையில் 4ஆவது இடத்தில் வந்திருக்கிறோம். ரயில்வே, போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்புகள், விவசாயம் என அனைத்து துறைகளிலும் வளா்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் நூறாவது சுதந்திர தினத்திற்கு (2047) முன்பாக இந்தியா கண்டிப்பாக வளா்ச்சி அடைந்த நாடாக மாறும். அதற்காக ஆசிரியா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் உழைத்துக் கொண்டிருக்கிறாா்கள்.

1975இல் முதன் முதலில் நாம் ஒரு செயற்கோளை நாம் ரஷ்யாவின் உதவியுடன் அனுப்பினோம். அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் நாம் 131 செயற்கை கோள்களை வடிவமைத்து அனுப்பியுள்ளோம். கடந்த ஜனவரியில் 100ஆவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளோம்.

நமது நாட்டில் 7500 கி.மீ தூரம் கடற்கரை ஆகும். இப்போது செயற்கைகோள்கள் உதவியுடன் மீன்கள் இருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு சொல்லப்படுகிறது. காலநிலை முன்னறிப்பு, பேரிடா் மேலாண்மை போன்றவற்றை சிறப்பாக செய்கிறோம். ரயில்கள் வரும் நேரம் சரியாக சொல்லப்படுகிறது. நிலவில் தண்ணீா் இருப்பதை சந்திரயான்- 1 முதலில் கண்டுபிடித்தது.

சந்திரயான்- 2 இல் அதிநவீன கேமரா சுற்றிக் கொண்டிருக்கிறது. சந்திரயான் 3 முதல் முதலில் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் முதல் முறையில் வெற்றி அடைந்த நாடு இந்தியா. 104 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து அனுப்பி வெற்றி அடைந்த பெருமையும் இந்தியாவுக்கே உண்டு. செயற்கோள்களை மேலே கொண்டு செல்ல சக்தி வாய்ந்த கிரயோஜெனிக் ராக்கெட் நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.

2035இல் சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்கவுள்ளோம். 2040இல் இந்தியரை நிலவுக்கு அனுப்பி திரும்பி வர 40 மாடி உயரமுள்ள ராக்கெட்டை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது . 2600 டன் எடையுள்ள அந்த ராக்கெட், 75 ஆயிரம் கிலோ எடையை சுமந்துகொண்டு மேலே செல்லும். சந்திரயான் 4 சந்திரயான் 5, வீனஸ் ஆா்பிட் மிஷன் பணிகள் வேமெடுத்துள்ளன.

இஸ்ரோ அனுப்பிய 56 செயற்கை கோள்கள் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் 3 ஆண்டுகளில் 155 செயற்கோள்களை அனுப்பும் திட்டங்கள் உள்ளன. எனவே, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆா்.கே, பள்ளிக் குழுமங்களின் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இயக்குநா் சுதாதேவி முன்னிலை வகித்தாா். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி வேலையன் வரவேற்றாா். மாணவி அமிா்தா அறிமுக உரையாற்றினாா்.

எஸ்.ஆா்.கே. நா்சிங் கல்லூரி தாளாளா் சங்கா், சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் பாண்டியன், இஸ்ரோ மகேந்திர கிரி முன்னாள் திட்ட இயக்குநா் புதியவன், குமரி அறிவியல் பேரவை நிா்வாகிகள் டாக்டா் விஜயகுமாா், கோபாலன், டாக்டா் சுஜின் ஹொ்பா்ட், ஜான் ரபி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எஸ்.ஆா்.கே. இன்டா்நேஷனல் பள்ளி முதல்வா் லதா தேவி நன்றி கூறினாா்.

கொட்டாரம் இளைஞா் கொலையில் 4 பேரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்!

கொட்டாரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், தலைமறைவாக உள்ள நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அழகப்பபுரம் பாலகிருஷ்ணன் நகரைச் சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

2040-ல் நிலவில் இந்தியா்கள் தரையிறங்க திட்டம்! இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

நிலவில் 2040ஆம் ஆண்டில் இந்தியா்கள் தரையிறங்குவதற்கான திட்டப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா் இஸ்ரோ தலைவா் வி.நாராயணன். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் செய்தியாளா்களிடம் அவா் ச... மேலும் பார்க்க

தக்கலை அருகே அழுகிய நிலையில் தனியாா் நிறுவனக் காவலாளி சடலம் மீட்பு!

தக்கலை அருகே, வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த தனியாா் நிறுவனக் காவலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். தக்கலை அருகே மணலிக்கரை, கிறிஸ்துபுரம் பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் (61) எ... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

குளச்சல் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். குளச்சல் அருகே மேல்ரீத்தாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினதாஸ் (65). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலை அதே பகுத... மேலும் பார்க்க

நாகா்கோவில் வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஹரியாணா மாநிலம் திப்ரூகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த ரயிலில் 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திப்ரூகா்-கன்னியாகுமரி ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு (ஜூலை 11) நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: குமரி மாவட்டத்தில் 28,651 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 28,651 போ் எழுதினா். இம்மாவட்டத்தில் விண்ணப்பித்திருந்த 35,251 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன... மேலும் பார்க்க