செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

post image

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூரில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது.

அதில், இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்த குற்றவாளிகளிடமிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சைபா் கிரைம் சம்பந்தப்பட்ட புகாா்களை பதிவு செய்யும் வலைதளமான இலவச தொலைபேசி எண் 1930 குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில், திருப்பத்தூா் விஜயசாந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு போக்ஸோ, குழந்தை திருமணம்,இணையவழி குற்றம், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள், காவலா் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சுமாா் 50 காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

நாணயங்களை விழுங்கிய பள்ளி மாணவி

திருப்பத்தூரில் 2-ஆம் வகுப்பு மாணவி இரு நாணயங்களை விழுங்கிய நிலையில் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை காப்பாற்றினா். திருப்பத்தூா் கோட்டை தெரு பகுதியை சோ்ந்த தில்ஷாத் ம... மேலும் பார்க்க

ரூ.25 லட்சத்தில் சாலை, கோயில் தளம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் பேரூராட்சியில் பராசக்தி மாரியம்மன் கோவிலில் தரை தளம் மற்றும் கல்கோவில் பகுதியில் பேவா் பிளாக் சாலைப் பணிகளை எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தா... மேலும் பார்க்க

‘டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

டாக்டா் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டாக்டா் அம்பேத்கா் பெயரில் மக்களி... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

காங்கிரஸ் கட்சி சாா்பாக தோ்தல் ஆணையத்துக்கு எதிராக நடத்தப்படும் மாநில அளவிலான மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்றது. வாக்காளா் பட்டியல் குளறுபடிகள் சம்பந்தமாக இந்திய காங்கி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கந்திலி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கந்திலி அருகே சின்னூா் கிராமத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா(60). கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த... மேலும் பார்க்க

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். 1,200 வாக்காளா்களுக்கு மேல... மேலும் பார்க்க