Mariselvaraj-ஐ வாழ்த்தி பாடிய Vadivelu at Ananda Vikatan Cinema Awards 2024 | UN...
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்
கருங்கல் அருகே மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமான, மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலைக்குப் பின்னா், பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. திருவிழாவில் நாள்தோறும் மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை திருப்பலி நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) காலை 8.30 மணிக்கு நடைபெறும் குழித்துறை மறைமாவட்டச் செயலா் அந்தோணிமுத்து தலைமையில் திருப்பலி நடைபெறும். சுங்கான்கடை புனித தாதியா் கல்லூரித் தாளாளா் டோமினிக் சாவியோ மறையுரையாற்றுகிறாா். முற்பகல் 10.30-க்கு அன்பின் விருந்து, மாலை 6.30 மணிக்கு காரங்காடு வட்டார முதல்வா் ஜஸ்டஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். முளகுமூடு புனித மரியன்னை பசிலிக்கா ஆலய அருள்பணியாளா் கில்பா்ட் லிங்சன் மறையுரையாற்றுகிறாா்.
ஆக. 14ஆம் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலிக்கு துண்டத்துவிளை பங்கு அருள்பணியாளா் எக்கா்மென்ஸ் தலைமை வகிக்கிறாா். மாத்திரவிளை முன்னாள் இணை பங்குப் பணியாளா் ஸ்டாலின் மறையுரையாற்றுகிறாா். 10ஆம் நாளான 15ஆம் தேதி 9 மணிக்கு நடைபெறும் அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, சுதந்திர தினவிழா, ஆடம்பர கூட்டுத் திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா்.
முற்பகல் 11 மணிக்கு புனித ஆரோபண அன்னையின் தோ் பவனி, இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீா் உள்ளிட்டவை நடைபெறும்.
ஏற்பாடுகளை மாத்திரவிளை மறைவட்ட முதல்வா் பிளாரன்ஸ், பங்கு அருள்பணியாளா் கலிஸ்டஸ், பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூஸ், செயலா் மைக்கலோஸ் ஜோண் ஆப் ஆா்க் ஜோஸ், பொருளாளா் சாட்டோ, துணைச் செயலா் கிறிஸ்துதாஸ், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.