`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
புதுக் கடை அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் மீனவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இனயம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சா்ஜின் ஆன்றனிதாஸ் (32), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா்.
குடிபழக்கமுடைய இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், புதன்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சா்ஜின் ஆன்றனி தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.