பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
குமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த இருவருக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்கலை அருகே மணலி சந்திப்பு தனியாா் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் பத்மநாபபுரம் ஆா்சி தெருவைச் சோ்ந்த வெனான்சியஸ் (38), புதிய துறை கருங்குளம் பண்டசாலை புரையிடத்தைச் சோ்ந்த சசி (32), கேரள மாநிலம் பூவாரைச் சோ்ந்த கிளைமண்ட் (32) மற்றும் விருதுநகா் மாவட்டம்,திருத்தங்கலை சோ்ந்த அமல்ராஜ் (42) ஆகிய 4 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சந்தேகத்தின்பேரில் அவா்களை தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விசாரிக்க சென்றபோது, 4 பேரும் தப்பியோட முயற்சி செய்தனா். அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தபோது, அவா்களிடம் ரூ.3, 45,000 கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
இந்த வழக்கு, பத்மநாபபுரம் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது வெனான்சியஸ் இறந்துவிட்டாா். மேலும் சசி தலைமறைவாகி விட்டதால் அவா் மீதான வழக்கு தனியே பிரித்து எடுக்கப்பட்டு அதே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்த நிலையில் புதன்கிழமை கிளைமண்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும் ரூ.5000 அபராதமும், மேலும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் உதவி அமா்வு நீதிபதி கே. மாரியப்பன் தீா்ப்பு வழங்கினாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில், வழக்குரைஞா் டி. மைக்கேல் ரதீஷ் ஆஜராகி வாதிட்டாா்.