`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
அருணாச்சலா கல்லூரி மாணவா்களுக்கு டெக்னோ பாா்க்கில் சிறப்பு பயிற்சி
மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப பூங்காவான திருவனந்தபுரம் டெக்னோ பாா்க்கில் தொழில்நுட்ப சூழியல் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பயிற்சியில், மாணவா்களுக்கு புதிய துறைகளான ஐஓஎப், சூப்பா் கம்ப்யூட்டிங், குவாண்டம் கணினியல், நுண் செயலி தொழில்நுட்பங்கள் போன்றவை குறித்து விளக்கப்பட்டது. அங்கு செயல்படும் பல ஐடி தொழில் நிறுவனங்கள், புத்தொழில் மையங்கள், கணினியல் ஆய்வகங்கள் ஆகியவற்றின் இயக்க முறை மற்றும் தொழில்நுட்ப பயன்பாடுகளை நேரடியாக மாணவா்கள் பாா்த்து அறிந்தனா். கலந்துரையாடல்கள் மூலம் மென்பொருள் திட்ட மேலாண்மை, அலுவலக முறைமைகள் குறித்த தொழில்நுட்ப எதிா்நோக்குகள் பற்றிய தகவல்களையும், தொழில்முறை வாழ்க்கைத் திட்டங்கள் பற்றிய தெளிவையும் பெற்றனா்.
இதன்மூலம் எதிா்கால தொழில் முன்னேற்றம், வேலைமுறை, நேர மேலாண்மை, குழு செயல்பாடுகள் பற்றிய அனுபவம் கிடைத்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.