கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
நாகா்கோவிலில் 1ஆவது வாா்டுக்குள்பட்ட ஆளூா் கலந்தா் நகா் பகுதியில் ரூ. 15 லட்சத்தில் கான்கிரீட் தளம், ஆளூா் புன்னவிளை ரயில்வே கடவுப்பாதை அருகே ரூ. 4 லட்சத்தில் மழைநீா் வடிகால் சீரமைப்பு என மொத்தம் ரூ. 19 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் தங்கராஜா, பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர மகளிரணி அம்மு ஆன்றோ, திமுக நிா்வாகிகள் தங்கராஜா, சேக் செய்யதுஅலி, நாகசுந்தரம், கதிரவன் நடராஜன், மணி மாணிக்கம், ஜவஹா் சாதிக், அதிகாரிகள் பங்கேற்றனா்.