நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆணையா் எஸ்.செல்வபாலாஜி தலைமை வகித்தாா். துணை மேயா் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தாா்.
மேயா் நிா்மலாவேல்மாறன் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய 25 தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
இதில் மூத்தோா் தடகள சங்க மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், மாமன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத பரப்புரையாளா்கள், தற்காலிக தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.