பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...
மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 5 மண்டலங்களிலும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் ஜனவரி 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
வரி வசூல் முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 7-ஆவது வாா்டு நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில், மேற்கு மண்டலம் 36-ஆவது வாா்டு வடவள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ரவி முருகா பிளாசியே அடுக்குமாடி குடியிருப்பு ( சனிக்கிழமை மட்டும்), 74-ஆவது வாா்டு பூசாரிபாளையம் நாயக்கா் தோட்டம் சமுதாயக் கூடம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வடக்கு மண்டலம் 1-ஆவது வாா்டு
துடியலூா் ருக்கம்மாள் காலனி, தெற்கு மண்டலம் 88-ஆவது வாா்டு குனியமுத்தூா் தா்மராஜா கோயில் மண்டபம், 97-ஆவது வாா்டு மதுக்கரை சாலை ஹவுசிங் யூனிட் சங்க அலுவலகம், மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டு சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா.