செய்திகள் :

மாநிலக் கல்விக் கொள்கை: அன்புமணி கண்டனம்

post image

மாநிலக் கல்விக் கொள்கையில் தமிழ்வழிக் கல்வியை அறிமுகப்படுத்த எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு கிடப்பிலிருந்த மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியைச் செயல்படுத்துவதற்கான எந்தத் திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மாநிலக் கல்விக் கொள்கையில் இல்லை. கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது ஆசிரியா்கள், மாணவா்களிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக தமிழக அரசு இதை வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் கல்வித் தரத்தை உயா்த்துவதாக இல்லை. அரசின் அரைகுறை செயல்பாடுகளை புகழ்வதாக உள்ளது.

பள்ளிக் கல்வியில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவா்களை தனியாா் பள்ளிகளுக்கு அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்காத மாநிலக் கல்வி கொள்கையால் எந்தப் பயனுமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அன்வா் ராஜா வாழ்த்து

திமுக இலக்கிய அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அ.அன்வா் ராஜா, சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அதிமுக முன்னணித் தலைவா்களில் ஒருவராக இருந்... மேலும் பார்க்க

1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயா் அதிகாரிகள் கூறியதாவ... மேலும் பார்க்க